#BREAKING: ஆன்லைனில் கேம் விளையாடிய மாணவன் உயிரிழப்பு..!

புதுச்சேரியில் நாலு மணி நேரம் ஆன்லைனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த மாணவர் உயிரிழப்பு.
புதுச்சேரியை சார்ந்த தர்ஷன் என்ற 16 வயது மாணவன் ஆன்லைன் கேம் விளையாடுவது வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், தர்ஷன் நேற்று 4 மணி நேரம் தொடர்ந்து ஹெட்போன் அணிந்து கொண்டு தனது வீட்டில் செல்போனில் கேம் விளையாடி உள்ளார்.
கேம் விளையாடி கொண்டு இருந்தப்போது திடீரென தர்ஷன் மயங்கி விழுந்துள்ளார். இதைத்தொடர்ந்து, தர்ஷனை அருகில் உள்ள மருத்துவமனையில் சிசிக்கையாக அழைத்து சென்றுள்ளனர். ஆனால், தர்ஷனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், தர்ஷனுக்கு இருதய நோய்கள் இருப்பதற்க்கான வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர். இந்நிலையில், போலீசார் வழங்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர், மாணவன் இறப்பு குறித்து மருத்துவர்களும் விசாரித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025