திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில், அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம் தொடங்கி உள்ளது.கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சந்தித்துள்ள அவலங்கள் – சரிவுகள் – தோல்விகளை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் இது தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று ஈரோடு மேற்கு தொகுதி- வெள்ளோடு ஊராட்சியில் திமுக சார்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பங்கேற்றார்.அப்பொழுது அவர் பேசுகையில்,திமுக ஆட்சி அமைந்தவுடன் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தவும் அன்றைய கூலியை அன்றே கொடுக்கவும் திமுக பரிசீலித்து வருகிறது.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பஞ்சு பதுக்கல் தடுக்கப்படும். நெசவாளர் நலன் பாதுகாக்கப்படும். ஜவுளி துறையில் புதிய சகாப்தம் உருவாக்கப்படும் என்று பேசியுள்ளார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…