ஆண்ட்ராய்டு போனுக்காக மாணவி தற்கொலை ,பாகுபாடின்றி ஆன்லைன் வகுப்புகளை நடத்துக – மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Published by
Venu

பாகுபாடின்றி அனைவரும் பயன்படுத்தும் வகையில், தரப்படுத்தி, சமவாய்ப்பை ஏற்படுத்திவிட்டு ஆன்லைன் வகுப்புகளை நடத்துக என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நேற்று நெஞ்சை கனமாக்கும் இரு செய்திகள்.உளுந்தூர்பேட்டை – மேட்டுநன்னாவரம் கிராமத்து விவசாயி ஆறுமுகத்துக்கு மூன்று மகள்கள். வசதி இல்லாததால் மூவருக்கும் சேர்த்து ஒரே செல்போன் வாங்கித் தந்துள்ளார். ஒரே நேரத்தில் மூவருக்கும் வகுப்புகள் எனில் யார் பயன்படுத்துவது? இதனால் ஏற்பட்ட விரக்தியில் மூத்த மகள் நித்யஸ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளார் .ஆலங்குடி – கபளம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஷ்மா,  நீட் தேர்வு எழுத வாய்ப்பு கிடைக்காத நிலையில் தற்கொலை செய்திருக்கிறார்.

நீட் தேர்வை பலிபீடம் என்பதும், அனைவருக்குமானது அல்ல ஆன்லைன் வகுப்புகள்’ என்பதும் இதனால்தான்.

ஆன்லைன் வகுப்புகளை அறிவிக்கும் முன் அனைவருக்கும் ஆண்ட்ராய்டு செல்போன் இருக்கிறதா? ஒரு வீட்டில் மூன்று குழந்தைகள் என்றால் தனித்தனியாக இருக்கிறதா ? தடையற்ற இணையம் இருக்கிறதா ? இணையத்துக்கு மாதம் தோறும் செலவு செய்யும் வசதி இருக்கிறதா – என எது குறித்தும் கவலைப்படாமல் அரசு அறிவித்ததால் ஏற்பட்ட மரணம் தான் நித்தியஸ்ரீயின் மரணம்.

கல்வி என்பது பட்டம் பதவிகளுக்கானது அல்ல; சம வாய்ப்பை வழங்காத எந்தக் கல்வியும் ஏற்றத்தாழ்வையும் விரக்தியையுமே விதைக்கும்.இதைச் சொல்வதால் ஆன்லைன் வகுப்புகளை எதிர்ப்பதாக பொருள் சொல்ல  வேண்டாம். பாகுபாடின்றி அனைவரும் பயன்படுத்திக் கொள்வதாக ஆன்லைன் வகுப்புகளில் சமவாய்ப்பை ஏற்படுத்திவிட்டு நடத்துங்கள் என்றே சொல்கிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

12 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

12 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

13 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

13 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

14 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

15 hours ago