,

பொதுத்தேர்வுவில் மாணவிகளை சோதனை செய்ய தடை.!

By

  • தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் 2-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.
  • தேர்வின் போது மாணவிகளை ஆண் ஆசிரியர்கள்  யாரும் சோதனை செய்யக் கூடாது என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் 2-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.பொதுத்தேர்வுக்காக முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.அந்த பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

இந்நிலையில் பொதுத்தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகளை மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அவர்கள் அனுப்பிய அந்த சுற்றறிக்கையில்  பறக்கும் படை பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் அனுபவம் உள்ள ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்.

மேலும் மாணவிகளை ஆண் ஆசிரியர்கள்  யாரும் சோதனை செய்யக் கூடாது பெண் ஆசிரியர்களை வைத்துதான் சோதனை செய்ய வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. அடிக்கடி புகார்கள் எழும் தேர்வு மையங்களில் பறக்கும்படை கவனமாக கண்காணிக்க வேண்டும் எனவும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

Dinasuvadu Media @2023