தமிழ்நாடு

மாணவர்கள் கடும் அதிர்ச்சி: அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் 50% உயர்வு! முழு விவரம்..

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம் 50% உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம் உயர்வால் மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி, இளநிலை பொறியியல் படிப்பு தேர்வுகளுக்கு ஒரு தாளுக்கான தேர்வுக்கட்டணம் ரூ.150-ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.225-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இளநிலை செய்முறை சமர்ப்பிப்புக்கு ரூ.300-ஆக இருந்த தேர்வுக்கட்டணம் தற்போது ரூ.450-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு செய்முறைக்கு ரூ.450-ஆக இருந்த தேர்வு கட்டணம் ரூ.650-ஆகவும், இதுபோன்று முதுநிலை மாணவர்களுக்கான ஆய்வு கட்டுரை (ஒரு தாளுக்கு) சமர்ப்பிப்புக்கு ரூ.600-ஆக இருந்த கட்டணம் ரூ.900-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்… நாளை சட்டமன்ற சிறப்புக் கூட்டம் – பாஜக நிலை என்ன?

மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் இளநிலை,  முதுநிலை பொறியியல் படிப்புக்கான டிகிரி உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறுவதற்கான கட்டணம் ரூ.1,000 லிருந்து ரூ.1,500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது என பல்கலைகழக நிர்வாகம் அறிவித்துள்ளது.  இந்த 50% தேர்வுக் கட்டணம் உயர்வுக்கு அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே தேர்வுக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்து, வலியுறுத்தி வருகின்றனர். ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் தேர்வு எழுத வேண்டி உள்ளதால் ரூ.2050 கட்ட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

11 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

11 hours ago

மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…

11 hours ago

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…

12 hours ago

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…

12 hours ago

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…

13 hours ago