நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புக்கு தடை விதித்தும், அப்பகுதியில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்நிலையில், நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டடங்கள் மற்றும் ரெசார்ட்டுகளை உடனடியாக அவர் அகற்றவும், விதிமுறைகளை மீறி புதிய கட்டடங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது எனவும் இந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில் 2017-ஆம் ஆண்டில் இருந்து ஆட்சியராக பணியாற்றிவந்த இன்னசென்ட் திவ்யா பணியிட மாற்றம் செய்யும் சூழல் நிலவிய போது, அவரை பணி இடமாற்றம் செய்யக்கூடாது என்று இந்த வழக்கில் முறையிடப்பட்டது. இதனையடுத்து, உச்ச நீதிமன்றம் அவரை பணியிடம் மாற்றம் செய்ய ப இடைக்கால தடை விதித்து இருந்தது.
இந்நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நிர்வாக ரீதியில் அவசர மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று இடைக்கால மனு தாக்கல் செய்தது. இதனையடுத்து, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…