NCW Member Khushbu [File Image]
நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பூகம்பமாய் வெடித்து. இதற்கு தமிழ் திரையுலகினர் மட்டுமின்றி அண்டை மாநில திரையுலகினரும் எதிர்ப்புகளை பதிவு செய்து வந்தனர். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூவும் மன்சூர் அலிகான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
குஷ்பூ தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் மன்சூர் அலிகான் குறித்து பதிவிடுகையில், சேரி பாஷையில் தன்னால் பேச முடியாது என கூறியிருந்தார். இது தான் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் குஷ்பூ பேசிய கருத்துக்கள் குறித்து தங்கள் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர்.
‘சேரி மொழி’ சர்ச்சை… குஷ்புவுக்கு வலுக்கும் கண்டனங்கள்! விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார்!
நடிகை குஷ்பு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக நிர்வாகி கார்த்திக் புகாரும் அளித்துள்ளார்.
சேரி எனும் வார்த்தை சர்ச்சையானதை அடுத்து சேரி என்றால் பிரென்ச் மொழியில் அன்பு என்ற பொருள் உள்ளது. அதனை வைத்து தான் கூறினேன் என விளக்கம் அளித்தும் இருந்தார். இன்று சென்னை விமான நிலையத்தில் இதுகுறித்து மீண்டும் தனது விளக்கத்தை தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ தெரிவித்து உள்ளார்.
அவர் கூறுகையில், நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.? வேளச்சேரி, செம்மஞ்சேரி என அரசாங்க பதிவேட்டிலேயே உள்ளது. சேரி என்றால் என்ன என்று நீங்கள் (பத்திரிகையாளர்கள்) கூறுங்கள். எனக்கு தமிழ் தெரியாது. நீங்கள் சொல்லுங்கள் நான் கேட்டுக்கொள்கிறேன் என பேசினார் .
மேலும், நான் தவறாக அர்த்தம் கொண்டு பேசவில்லை. என்னைப்பொறுத்தவரை எல்லாரும் சமம். சேரி என்பது தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதி என நான் கூறவில்லை. தகாத வார்த்தை கொண்டு நான் பேசவில்லை. புரிந்து கொள்ளாதவர்களுக்கு ஏன் நான் பதில் கூறவேண்டும். என்னை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராடுகிறர்கள். திரௌபதி முர்மு குடியரசு தலைவர் பதவிக்கு தேர்தலில் நிற்கும் போது தீயசக்தி என கூறியவர்கள் காங்கிரஸ்காரர்கள் என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ கடுமையாக விமர்சித்து இருந்தார்.
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…