சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. காலை 10 மணியளவில், தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி, புதிய எம்.எல்.ஏ-க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். முதல்வர், அவைமுன்னவர், எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்கள் மற்றும் அக்கரவரிசைப்படி எம்.எல்.ஏ-க்களும் பதவியேற்பர்.
மேலும், கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டு, பங்கேற்க முடியாதவர்கள் வேறு ஒரு நாளில் எம்.எல்.ஏ-வாக பதவியேற்க உள்ளனர். கூட்டத்திற்கு வரும் எம்.எல்.ஏ-க்கள் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும் தவறாமல் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள்ளது.
மேலும், சபாநாயகர் பதவிக்கு போட்டியிட அப்பாவு-வும், துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிட கு.பிச்சாண்டியும், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். இதனையடுத்து, நாளை நடைபெறவுள்ள சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலில், மு.அப்பாவு-வும், துணை சபாநாயகராக கு.பிச்சாண்டியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், சபாநாயகராக மு.அப்பாவு-வும், துணை சபாநாயகராக கு.பிச்சாண்டியும் போட்டியின்றி தேர்வாக உள்ளனர்.
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…