”பாஜக மாநில துணைத் தலைவராக குஷ்பு நியமனம்” – தமிழ்நாடு பாஜக தலைவர் அறிவிப்பு.!

தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில், குஷ்பு, சசிகலா புஷ்பா உள்ளிட்ட 14 பேர் மாநில துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

khushbusundar - BJP

சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் ஒப்புதலுடன் இந்த புதிய மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதாக தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

இந்த நியமனங்கள் தமிழக பாஜகவின் மாநில நிர்வாகிகள், அணிகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்களை உள்ளடக்கியவை. அதில், குஷ்பு, சசிகலா புஷ்பா உள்ளிட்ட 14 பேர் மாநில துணை தலைவர்களாக நியமிக்க்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, வினோஜ் பி செல்வம், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட 15 பேர் மாநில செயலாளர்களாகவும், பொருளாளாரக S.R.சேகர் நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட 5 பேர் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பாஜக மாநில துணைத் தலைவர்களாக சக்கரவர்த்தி, V.P.துரைசாமி, K.P.ராமலிங்கம், கரு.நாகராஜன், சசிகலா புஷ்பா, கனகசபாபதி, டால்பின் ஸ்ரீதர், AD சம்பத், பால் கனகராஜ், ஜெயபிரகாஷ், மா.வெங்கடேசன், K.கோபால்சாமி, N.சுந்தர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்