நாளை தமிழக பட்ஜெட் தாக்கல்..! எதிர்பார்ப்பில் மக்கள்..!

Published by
murugan

சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சபாநாயகர் அப்பாவு தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 18-ஆம் தேதி (நாளை) 2022-23-ஆம் நிதியாண்டுக்கான  பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்றும் இதுபோன்று வேளாண் பட்ஜெட் மார்ச் 19-ஆம் தேதி (நாளை மறுநாள்) தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

2-வது பட்ஜெட்:

சபாநாயகர் தலைமையில் அன்று அலுவல் ஆய்வுக்குழு கூடி பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.  தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பிறகு தாக்கல் செய்யப்படும் 2-வது பட்ஜெட் இதுவாகும். முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று முதன்முறையாக கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி 2021-22ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

நாளை  2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்:

இந்த பட்ஜெட்டில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய அறிவிப்பை நிதியமைச்சர் தியாகராஜன் அறிவித்தார்.  2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாளை காலை 10 மணிக்கு  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் தாக்கல் செய்கிறார்.  இந்த பட்ஜெட்டில், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது குறித்த அறிவிப்பு நாளை பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்படுமா..? என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் உள்ளது. மேலும், இந்த பட்ஜெட்டில், திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை அறிவிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

Published by
murugan

Recent Posts

ராமதாஸ் vs அன்புமணி : தனித்தனியாக கூட்டத்தை நடத்துவதால் நிர்வாகிகள் குழப்பம்!

ராமதாஸ் vs அன்புமணி : தனித்தனியாக கூட்டத்தை நடத்துவதால் நிர்வாகிகள் குழப்பம்!

சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும்…

10 minutes ago

இனிமே வரிகட்டணும்… ஜப்பான், தென்கொரியப் 25 % வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…

35 minutes ago

மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்யணும் – உத்தரவு போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்! என்ன காரணம்?

மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…

1 hour ago

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…

11 hours ago

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

11 hours ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

12 hours ago