இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் சளித்தொல்லை காரணமாக சென்னை ராமச்சந்திரமிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல் பரிசோதனையில் கொரானா தொற்று இல்லை என்று தெரிய வந்தது. இரண்டாவதாக எடுத்த பரிசோதனையில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராமகோபாலன் இன்று உயிரிழந்தார்.
இந்நிலையில் இவரது மறைவு குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார. அதில், இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர் திரு. இராம. கோபாலன் அவர்கள் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். திரு. ராம கோபாலன் அவர்கள் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டதோடு, இந்து முன்னணி இயக்கத்திற்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்
திரு. இராம கோபாலன் அவர்களை இழந்து வாடும், அவரது இயக்க தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. இரா. கோபாலன் அவர்களின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…