ஏப்.2 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்!

Published by
Edison

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய, மாநில கட்சிகள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் சேர்த்து 7 எம்.பி.க்களைப் பெற்றிருந்தால்,அக்கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் கட்டுவதற்கு இடம் வழங்க மத்திய அரசு கடந்த 2006 ஆம் ஆண்டு முடிவு செய்தது.

அதனடிப்படையில்,கடந்த 2013 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள தீன் தயால் உபாத்தியாயா மார்க் பகுதியில்,திமுக கட்சி அலுவலகம் கட்ட  இடம் ஒதுக்கப்பட்டது.டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் அருகில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தி.மு.க. அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில்,வருகின்ற ஏப்.2 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளார்.டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளதையடுத்து, அதனை திறந்து வைக்க முதல்வரும்,திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க டெல்லி பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வரான பிறகு 3-வது முறையாக மு.க.ஸ்டாலின் அவர்கள் டெல்லி பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

7 minutes ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

3 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

3 hours ago

கள்ளழகர் திருவிழா: ”இதை செய்யவே கூடாது” கோவில் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள்.!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…

4 hours ago

களத்தில் இறங்கிய இந்திய விமானப்படை! உ.பி அதிவிரைவு சாலையில் தீவிர பயிற்சி!

லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…

4 hours ago

”பலரின் தூக்கத்தை கலைக்கும் காட்சி இது” – கேரள விழிஞ்சம் துறைமுகம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி.!

திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…

4 hours ago