சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின்மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிடநடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வருக்கு கடிதம்.
சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின்மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையின் சேமிப்பை பராமரிக்கவும், சிறுவாணி அணையிலிருந்து குடிநீர் விநியோகத்தை மேலும் அதிகரிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.
சிறுவாணி அணையிலிருந்து ஆண்டுதோறும் 1.30 டி.எம்.சி.க்கு மிகாமல் (ஜூலை 1 முதல் ஜூன் 30 வரை) குடிநீர் வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசுக்கும் கேரள அரசுக்கும் இடையே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு, ஆயிலும் கடந்த ஆறு ஆண்டுகளில், கேரள அரசு 0.484 டி.எம்.சி.-யிலிருந்து 1.128 டி.எம்.சி அளவிற்குத்தான் தண்ணீரை வழங்கியுள்ளது என்று புள்ளி விவரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பலமுறை தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், கேரள நீர்ப்பாசனத் துறை, 878.50 மீட்டர் அளவிற்கு, அதாவது முழு நீர்த்தேக்க மட்டம் வரை, சிறுவாணி அணையின் நீர் இருப்பின் மட்டத்தைப் பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், முழு கொள்ளளவிற்கு நீரைச் சேமித்து வைக்காவிட்டால், சிறுவாணி நீரை நம்பியுள்ள கோவை மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள், அடுத்த கோடைகாலத்தில் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…