தமிழகத்தில் நாளை முதல் 17 தொழிற்பேட்டைகள் இந்த கட்டுப்பாடுகளுடன் இயங்கும்- தமிழக அரசு!

தமிழகத்தில் நாளை முதல் சில கட்டுப்பாடுகளுடன் 17 தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால், 4ஆம் கட்ட ஊரடங்கை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் நாளை முதல் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் இயங்க சில கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அதில், அனைத்து தொழிற்பேட்டைகளிலும் 25 சதவீத அளவிலான பணியாளர்களை இயங்குமாறும், பணிக்கு வரும் தொழிலார்கள் அனைவரின் உடல்வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
முகக்கவசம் அணிந்து பணிக்கு செல்ல வேண்டும். அங்கு பணியாளர்கள் அனைவரும் தனிநபர் இடைவெளியுடன் பணிபுரிய வேண்டும். மேலும், பணியாற்றும் இடங்களை கிருமி நாசினிகள் தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும். குறிப்பாக, 55 வயது மேல் உள்ள தொழிலாளர்கள் பணிக்கு வரவேண்டாம் என்பன போன்ற விதிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டை, நாளை முதல் 25% தொழிலாளர்களை மட்டும் கொண்டு இயங்க அனுமதி .#TamilNadu #TNGovt #ChennaiCorporation pic.twitter.com/mNgvSKJarq
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) May 24, 2020