pongal parisu [file image]
ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீட்டு இருக்கிறது.
இது குறித்து வெளியிடபட்டுள்ள அறிவிப்பில் ” பொங்கல் 2024 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் – இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்குதல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
மேலும், இந்த பொங்கல் பரிசு தொகுப்பு 2,19,57,402 எண்ணிக்கையிலான குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிடும் பட்சத்தில் ரூ.238,92, கோடி செலவினம் ஏற்படும். எனவும் அரசாணையில் விவரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொதுமக்களுக்கு 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி, மற்றும் முழு கரும்பு ஆகியவற்றுடன் சேர்த்து ரூ.1000 பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு இருந்தது.
மேலும், அதனை தொடர்ந்து இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…