தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை துவக்கி வைக்கிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை தொடக்கி வைக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு, தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்த நிலையில், புதிதாக செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்துார், தென்காசி என 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரிக்கப்பட்டு மயிலாடுதுறையை தமிழகத்தின் 38வது மாவட்டமாக உருவாக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. பின்னர் மாவட்டத்தின் எல்லைகளை வரையறை செய்ய சிறப்பு அதிகாரியாக லலிதா ஐ.ஏ.எஸ். மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஐ.பி.எஸ். ஆகியோர் நியமிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி நாளை காணொலி வாயிலாக மயிலாடுதுறை மாவட்டத்தை தொடங்கிவைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…