தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டத்தை வென்ற தமிழ்நாடு அணி…அமைச்சர் உதயநிதி வாழ்த்து..!!

Udhaystalin

தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 15-ம் தேதி முதல் 19 வரை ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்றது. இந்த, தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழ்நாடு அணி  9 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 18 பதக்கங்களை பெற்று, 127 புள்ளிகளுடன் வெற்றிபெற்றது.

இந்நிலையில், தமிழ்நாடு அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிவிட்டரில் அவர் கூறியதாவது ” ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கடந்த 15-ம் தேதி முதல் 19 வரை நடைபெற்ற தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 9 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 18 பதக்கங்களை பெற்று, 127 புள்ளிகளுடன் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு 7 வீரர்கள் தகுதி பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு. விளையாட்டுத்துறையிலும் தமிழ்நாடு முதலிடத்தை நோக்கி வெற்றி நடைபோடுவதற்கு உதாரணமாகத் திகழும் நம் வீரர் மற்றும்  வீராங்கனையருக்கு வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்