மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உடன் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் சந்திப்பு!

மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை இன்று சந்தித்தார் அமைச்சர் துரைமுருகன்.
டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சந்தித்துள்ளார். காவிரி நதிநீர் பங்கீடு, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட சில முக்கிய கோரிக்கைகளை மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
இந்த சந்திப்பில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றுள்ளார். ஜூன், ஜூலை மாதங்களுக்கான காவிரி நீரை தமிழகத்திற்கு உடனடியாக பெற்றுத்தர வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
மேலும், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதி வழங்க கூடாது என மத்திய அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் கஜேந்திரசிங்கை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இன்று மீண்டும் சந்தித்து சில முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளார்.