தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனுக்கு கொரோனா தொற்று உறுதி..!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வைரஸ் தொற்றால் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.