vijay [file image]
Vijay : சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து விஜய் வாக்கு செலுத்தினார்.
இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19) நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழகத்தில்39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கே தொடங்கிய நிலையில், பொது மக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாக்கு செலுத்தி வருகிறார்கள்
அந்த வகையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தனது வாக்கை செலுத்துவதற்கு நீலாங்கரையில் உள்ள அவருடைய இல்லத்தில் இருந்து வாக்குச்சாவடிக்கு காரில் வந்து வாக்கு செலுத்தினார். கோட் படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யாவில் இருந்த விஜய் வாக்கு செலுத்துவதற்காக விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்து இறங்கினார். அதன்பிறகு சென்னை நீலாங்கரை இல்லத்திற்கு சென்றார்.
இல்லத்தில் இருந்து வாக்கு செலுத்துவதற்கு காரில் ஏறி சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றார். அவருக்கு பாதுகாப்பாக பின்னாடியே பாதுகாவலர்களும் வந்தார்கள். விஜய் வருவதை அறிந்த ரசிகர்கள் கூட்டமாக அந்த இடத்தில் விஜயின் காரை தொடர்ந்து கொண்டே வந்தார்கள்.
பிறகு காரில் இருந்து இறங்கி விஜய் தனது வாக்கை செலுத்திவிட்டு சென்றார். வாக்கு செலுத்தும் போதும் விஜய்யை பார்க்கவேண்டும் என்ற நோக்கத்தோடு கூட்டமாக அந்த வாக்கு சாவடியில் கூடினார்கள். வாக்கு செலுத்திய பிறகு அங்கு இருந்த காவலர்கள் விஜய்யை பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர். அரசியல்வாதியாக விஜய் தனது முதல் வாக்கை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…