தடுப்பூசி செலுத்த விருப்பமில்லாத ஆசிரியர்கள் வீட்டில் இருங்கள் – உயர்நீதிமன்றம்

தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பாத ஆசிரியர்கள் பிறர் நலன்கருதி வீட்டிலேயே இருப்பதுதான் நல்லது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, மாணவர்கள் நலன்கருதி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம்.
தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பாத ஆசிரியர்கள் பிறர் நலன்கருதி வீட்டிலேயே இருப்பதுதான் நல்லது. 2 தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், பிற்காலத்தில் மாற்று கூட வரலாம் என்றும், மாணவர்களின் நலன் கருதி தான் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்று கூறி, இது பொதுநலனுக்கு எதிரான வழக்கு என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025