மதுரை பென்னிகுவிக் வசித்த இல்லத்தை இடித்து, அங்கு கருணாநிதி நூலகம் கட்டுவதாக செல்லூர் ராஜு பேசியதற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விளக்கம்.
இன்று நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், மதுரையில் பென்னி குவிக் வசித்த இல்லத்தை இடித்து, அங்கு கருணாநிதி நூலகம் கட்டுவதாக அதிமுகவின் செல்லூர் ராஜு கூறியதற்கு, பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பென்னி குவிக் இல்லத்தை இடித்துவிட்டு கருணாநிதி நூலகத்தை கட்டப்படவில்லை என்றும் ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நீங்கள் சொல்வதற்கு ஆதாரங்கள் இருந்தால், இந்த அரசு அடிபணிய காத்திருக்கிறது என்றும் எந்தவித ஆதாரமும் கிடையாது, ஒரு தவறான பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள் எனவும் விளக்கமளித்தார்.
எந்தவித வித ஆதாரமும் இல்லாமல், பென்னிகுவிக் இல்லத்தை இடித்துவிட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி நூலகம் அமைக்கப்படுகிறது என்று செல்லூர் ராஜு போன்ற மூத்த உறுப்பினர் தவறான தகவலை அவையில் கூறக்கூடாது. மூன்றாவது முறையாக சட்டமன்றத்துக்கு வந்துள்ளீர்கள். இதுபோன்று சொல்வது உங்களது திறன் தன்மையை குறைப்பதாக உள்ளது என தெரிவித்தார்.
இதனிடையே, மதுரையில் அமைந்துள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக் (முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய) நினைவு இல்லத்தை இடித்துவிட்டு கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்க திமுக அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக வெளியான தகவல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…