பராமரிப்பு பணிகளுக்காக கோயில் திறப்பு ! பக்தர்களுக்கு அனுமதி இல்லை – தமிழக அரசு

கோயில் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பள்ளிகள்,கல்லூரிகள்,பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது.அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.இந்த சமயத்தில் தான் ஆலயங்களை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதாவது , கோயில் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் 33% பணியாளர்களுடன் கோயில் அலுவலகங்கள் இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . பணியாளர்கள் முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்ற வேண்டும்.கொரோனா பரவலை தடுக்க அனைத்து திருக்கோயில்களிலும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.திருக்கோயில்களில் நோய்தடுப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025