முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக மனமுவந்து நன்கொடை அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரபலங்கள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் கொரோனா நிவாரண நிதிக்காக தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி பல்வேறு பிரபலங்கள் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தங்களால் இயன்ற உதவி செய்துள்ளனர்.
இதுவரையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதியாக ரூ.181 கோடி பெறப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மனமுவந்து நன்கொடை அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த நிவாரண நிதியிலிருந்து ஆக்சிஜன் கண்டெய்னர்களை வாங்க முதற்கட்டமாக ரூ.50 கோடியம், ஆர்.டி.பி.சி.ஆர் ஹிட்களை வாங்க ரூ.50 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…