தமிழிசை: நடைபெற்ற மக்களவை தேர்தலில், தமிழக மக்களவை தொகுதியான கோவையில் போட்டியிட்ட மாநில பாஜக தலைவரான அண்ணாமலை 2-வது இடம் பிடித்து தோல்வியை தழுவினார். மேலும், தற்போது அவர் அந்த தோல்விக்கு அதிமுக தான் காரணம் என செய்தியாளர்களிடம் பேசி வருகிறார்.
அதே நேரம் சென்னையில் பாஜகவின் மூத்த தலைவரான தமிழிசை அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அண்ணாமலை கூறிய கருத்துக்களை குறித்து பத்திரிகையாளர்கள் அவர்களிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, “அண்ணாமலை தம்பி கூறிய கருத்துக்களை குறித்து என்னிடம் கேட்காதீர்கள். அது அவரது கருத்து, மேலும் இதை வைத்து அண்ணாமலைக்கும், தமிழிசைக்கு சண்டை என்று தவறாக எண்ண கூடாது.
கட்சிக்குள் நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். அவர் அவர்கள் கருத்தை சொல்வதற்கு சுதந்திரம் இங்கு உள்ளது. அதனால் அவரது கருத்தை பற்றி என்னிடம் கேட்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்”, என அவர் கூறினார்.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…