திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சிக்கினாபுரத்தில் அரசு நடுநிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அப்பள்ளியில் படிக்கும் 3-ம் வகுப்பு மாணவன் தரணேஷ், மாவட்ட ஆட்சியருக்கு நன்றி கடிதம் ஒன்று எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அன்புள்ள மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நானும் எனது நண்பர்களும் பள்ளிக்கு நடந்துதான் செல்வோம் என்றும் எங்கள் வீட்டிலிருந்து பள்ளிக்கு சுமார் 10 கிலோ மீட்டர் வரை நடந்து செல்ல இருப்பதால் கஷ்டமாக இருக்கிறது. அதுவும் மழைக் காலங்களில் பள்ளிக்கு செல்லும் வழியில் ஓடைமுழுவதும் தண்ணீர் செல்லும். அந்த ஓடையை தாண்டித்தான் நாங்கள் பள்ளிக்கு செல்ல முடியும் என்று கூறிருந்தார். மேலும் எங்கள் பகுதியில் இருக்கும் சகோதர்கள் சமூக வலைதளத்தில் பேருந்து வசதி ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை வைத்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பணிமனை மேளாலர் தாராபுரம் அவர்கள் இன்னும் 10 நாட்களில் பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார். இந்த செய்தி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பின்னர் பேருந்து வசதி கிடைப்பதற்கு காரணமாக இருந்த தங்களுக்கு எனது பள்ளி சார்பாகவும், மாணவர்கள் சார்பாகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் தங்களுக்கு நேரம் இருந்தால் பேருந்து துவக்க விழாவிற்கு வருகை தரவேண்டும் என்று குறிப்பிட்டார். பள்ளி மாணவனின் கடிதத்தை பார்த்த மாவட்ட ஆட்சியர் விஜயகார்திகேயன் ட்விட்டர் பக்கத்துல் மாணவனுக்கும், அவரது நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் என்று கூறி மாணவனின் கடிதத்துடன் பதிவிட்டுள்ளார். மாணவனின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…