அதிமுக தலைமையில் தான் கூட்டணி, அமித்ஷா வின் பேச்சுக்கு செம்மலை பதில்.!

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி, அமித்ஷா வின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை பதில்.
மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக முக்கிய தலைவருமான அமித்ஷா, கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்துள்ளார். இன்று தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள், தென் சென்னை பாஜக நிர்வாகிகளுடன் சென்னை கேளம்பாக்கத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில அமித்ஷா பேசுகையில், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக 25 தொகுதிகளை வெல்ல வேண்டும் என குறிப்பிட்டதாக வந்த செய்தியை அடுத்து, இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை, கூட்டணி பேச்சுக்கு முன்பாக எத்தனை தொகுதி என்பதை முடிவு செய்ய முடியாது, கூட்டணி குறித்து அதிமுக தலைமைதான் முடிவு செய்யும்.
மேலும் தமிழ்நாட்டில் பாஜவுடனான கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என்று கூறியுள்ளார். வரும் காலங்களில் தமிழர் பிரதமராக உருவாகவேண்டும் என அமித்ஷா பேசியிருந்தார், இதனை வரவேற்பதாகவும் செம்மலை கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025