சென்னை:அந்தமான் அருகே வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடலில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னைஅருகே நேற்று மாலை கரையைக் கடந்த நிலையில்,இடைவிடாது பெய்த மழையால் சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளித்துள்ளது. எனினும்,சென்னைக்கான ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வு மண்டலம் விளக்கிக் கொண்டதால் பொதுக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
இந்நிலையில்,வங்க கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் நாளை புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.
மேலும்,இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது வருகின்ற 15 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்றும் அதன்பின்னர் மேற்கு-வடமேற்கு திசையில் தமிழகத்தின் கரையை நோக்கி நகரும் என்றும் கூறியுள்ளார்.
இதனால்,கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்றும்,குமரிக்கடல்,கேரள கடலோரம், மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…
சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…