CM program has been postponed! [file image]
இன்று முற்பகல் மிக்ஜாம் புயல் தீவிர புயலாக மாறும். 10 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வரும் நிலையில், நாளை ஆந்திராவில் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக சென்னையில் இன்று இரவு வரை கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெரும்பாலான பகுதியில் மழை நீர் தேங்கி இருப்பதால், தேங்கி இருக்கும் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னைக்கு 110கி.மீ தொலைவில் புயல்..! இன்று இரவு வரை மழை தொடரும்..!
6,000க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தாம்பரத்தில் மட்டும் 600-க்கும் மேற்பட்டோர் மீட்புக்குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் ராமசந்திரன், சென்னை மேயர், ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். மழை தொடர்பான புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மக்கள் பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறும், வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், சென்னை கட்டுப்பாட்டு அறையில், மழை பாதிப்புகளை அமைச்சர் நேரு நேரடியாக கண்காணித்து வரும் நிலையில், மழை பாதிப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் நேருவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…