முழு அரசு மரியாதையுடன் நடைபெற முதலமைச்சர் ஆவன செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பி. சுப்பிரமணியம் கடந்த 50 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .கொரோனாவில் இருந்து மீண்டபோதும், பிற உடல் உறுப்புகள் ஒத்துழைக்காத நிலையில், இன்று அவர் காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பிரதமர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் மருத்துவமனையில் இருந்து நுங்கப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் , தமிழர்களின் நெஞ்சில் நிறைந்தவராக அரை நூற்றாண்டு காலம் புகழோடு விளங்கி, பத்மஸ்ரீ-பத்மபூஷண் விருதுகள் பெற்ற SPBalasubrahmanyam அவர்களின் இறுதிப்பயணம் உலகெங்கிலும் வாழும் ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் முழு அரசு மரியாதையுடன் நடைபெற முதலமைச்சர் ஆவன செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…