இயந்திரத்தில் சிக்கி கை துண்டான தற்காலிக துப்புரவு பணியாளர் தன்னை கருணை கொலை செய்ய அனுமதி கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள வடக்கு தெருவில் வசித்து வருபவர் ரேவதி. பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். கொரோனா ஊரடங்கின் மீது நுண் உரம் செயலாக்க மையத்தில் பணிபுரிந்து வந்தார். அங்கு மக்கும் உரங்களையும், மக்காத உரங்களையும் பிரித்தெடுத்து அதனை இயந்திரத்தில் மாற்றி வேலை செய்து கொண்டிருந்த போது அவரது கை இயந்திரத்தில் சிக்கி துண்டானது.
உடனடியாக தஞ்சையிலுள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சில நாட்களில் வீட்டில் இருந்து ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் அவர் வேலையில்லாமல் தனது இரண்டு குழந்தைகளுடன் வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும் , எனவே தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் அரசு அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், எனவே தன்னை கருணை கொலை செய்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கூறி மனு ஒன்றை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார். இவரது இந்த நிலையை கண்டு பலருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…