தொண்டு நிறுவனங்களை முழுவதுமாக முடக்கி விடும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றது. அந்தவகையில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா (foreign contribution regulation act )என்பது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சரியான முறையில் பதிவு செய்து, வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதியை மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெறுவதே ஆகும்.வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா சான்றிதழை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மத்திய அரசிடம் வழங்க வேண்டும். தங்களுக்கு வரும் மொத்த வெளிநாட்டு நிதியில் 20 % மேல் நிர்வாக செலவிற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடாது. ஆதார் எண்ணை அடையாளச் சான்றிதழாக கட்டாயம் அளிக்க வேண்டும். பிரத்யேக வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா வங்கி கணக்குகளில் மட்டுமே தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியைப் பெற வேண்டும். மேலும் பொதுத்துறை ஊழியர்கள் வெளிநாட்டு நிதியுதவி பெறும் செயல்களில் ஈடுபடக் கூடாது என்று இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,நாட்டின் முன்னேற்றத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆற்றியுள்ள பெரும் பங்கை நிராகரிக்க முடியாது. கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் குறித்தவற்றில் இத்தொண்டு நிறுவனங்கள் அளப்பறிய பங்காற்றியுள்ளன. இத்தகைய தொண்டு நிறுவனங்கள் இல்லாதிருந்தால், பல மனித உரிமை மீறல் சம்பவங்கள் மறைக்கப்பட்டிருக்கும் இத்தொண்டு நிறுவனங்கள் குரலற்றவர்களின் குரலாக இருந்து வருகின்றன. மத்திய அரசு செயல்படுத்த உள்ள அந்நிய நிதி ஒழுங்குமுறை திருத்தச் சட்டம் 2020, எதிர்ப்பு குரல்களை முடக்கும் பிஜேபியின் பெரும் திட்டத்தின் ஒரு பகுதியே. இச்சட்டம் தொண்டு நிறுவனங்களை முழுவதுமாக முடக்கி விடும் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…