சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சியில் 15 வார்டுகள் 22,393 வாக்காளர்கள் கொண்ட பெரிய ஊராட்சியான சங்கராபுரத்தில் பெண்களுக்கான பிரிவு ஒதுக்கப்பட்டது.இந்த பகுதியில் தலைவர் பதவிக்கு ஏற்கனவே பதவியில் இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாங்குடி என்பவர் அவரது மனைவியான தேவி மாங்குடியை வேட்பாளராக களமிறக்கினார் .இவருக்கு எதிராக அங்குள்ள தொழில் அதிபர் ஐயப்பன் என்பவர் அவரது மனைவி பிரியதர்ஷினியை களமிறக்கினார்.
ஆனால் தேவி மாங்குடி வாக்கு எண்ணிக்கையில் 318 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி வெற்றி பெற்ற சான்றிதலை வழங்கினார்.ஆனால் அதை ஏற்க மறுத்த வேட்பாளர் பிரியதர்ஷினி ஒரு பெட்டி வாக்கு எண்ணப்படவில்லை என்ற புகாரை முன்வைத்தார்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் விஷயத்தை அறிந்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டார். மறு வாக்கு எண்ணிக்கை நடத்தியதில் பிரியதர்ஷினி அய்யப்பன் 63 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.
இதனை அடுத்து பிரியதர்ஷினி ஐயப்பன் வெற்றி அடைந்ததாகவும் தேவி மாங்குடி தோல்வி அடைந்ததாகவும் அறிவித்தனர். இந்நிலையில் இரு தரப்பினரும் வெற்றி பட்டதாக ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள்.இதனால் யார் வெற்றி பெற்றார்கள் என்று ஊர் மக்கள் குழப்பமடைந்தனர் .தற்போது இது தொடர்பான மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ,தேவி மாங்குடி பதவியேற்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…