தொகுதிகள் குறைந்ததற்கு காங்கிரஸ் கட்சியின் தவறே காரணம் – ப.சிதம்பரம்
தொகுதி எண்ணிக்கை குறைவிற்கு காங்கிரஸ் கட்சியின் தவறே காரணம் என்று அக்கட்சி முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் தொகுதிகள் குறைக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சியின் தவறே காரணம் என முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். கடந்த காலங்களில் 60 சீட் தந்தும் சில இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்ததால், காங்கிரஸுக்கு தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது என்றும் வெற்றி பெறும் வாய்ப்பை வைத்துதான் கூட்டணி கட்சிக்கு இடம் ஒதுக்குவதை கணிப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தொகுதி பங்கீடு குறித்து திமுக – காங்கிரஸ் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், 25 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டு வழங்கி ஒப்பந்தம் இன்று காலை கையெழுத்தானது. காங்கிரஸ் தரப்பில் 35 லிருந்து குறைந்தது 27 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில், திமுக 25 தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.