பிரபல ரவுடியின் கழுத்தை அறுத்து கொண்ட கிருஷ்ணாவை என்கவுண்டரில் சுட்டு கொன்ற போலீசார்.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடியான வீரா என்பவர் நேற்று அவரது வீட்டின் அருகே அமர்ந்து இருந்துள்ளார். அப்போது அவரை ஒரு கும்பல் சுற்றி வளைத்துள்ளது. சுற்றி வளைத்த கும்பல் அவரின் கழுத்தை அறுத்து தலையை தனியாக எடுத்துச் சென்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
கழுத்தில்லாமல் இருந்த வீராவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், வீராவின் தலை எங்கு இருக்கும் என்ற சந்தேகத்தில் நேற்று இரவு முதலே காவல்துறையினர் தேடி வந்த நிலையில், இந்த கொடூர கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் வலைவீசி வந்தனர்.
இதனையடுத்து, புதுப்பேட்டை மலட்டாறு பகுதியில் குற்றவாளிகள் 7 பேர் சுற்றிவளைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதில் கிருஷ்ணா என்பவர் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் இதனையடுத்து அவரை போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், கிருஷ்ணாவின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், கிருஷ்ணாவுக்கும் வீராவிற்கும் ஏற்கனவே முன்பகை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் இந்த கொடூரக்கொலை நடந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…