அனைவருக்கும் தமிழக அரசு இலவசமாக தடுப்பூசி செலுத்த முன்வரவேண்டும் என அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
60 வயதுக்குட்பட்டோர் பூஸ்டர் தடுப்பூசி கட்டணம் செலுத்தி, தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செலுத்தி வருகின்றனர். எனவே, அனைவருக்கும் தமிழக அரசு இலவசமாக தடுப்பூசி செலுத்த முன்வரவேண்டும் என அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஹரியானாவில் 18 முதல் 59 வயது வரையிலான அனைவருக்கும் கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி மாநில அரசின் செலவில் இலவசமாக செலுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதே அறிவிப்பை தில்லி அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது!
தமிழ்நாட்டிலும் கொரோனா பரவலைத் தடுக்க 60 வயதுக்கு உட்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக செலுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கடந்த 11-ஆம் தேதி தமிழக அரசுக்கு யோசனை தெரிவித்திருந்தேன். அது உடனடியாக ஏற்கப்பட வேண்டும்!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் விகிதம் சற்று அதிகரித்து வருகிறது. அடுத்த சில மாதங்களில் நான்காவது அலை தொடங்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், அதைத் தடுக்க தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்!
60 வயதுக்குட்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செலுத்தப்படுகிறது;ரூ.375 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏழைகளால் இவ்வளவு கட்டணம் செலுத்துவது சாத்தியமல்ல. அதனால் அனைவருக்கும் தமிழக அரசு இலவசமாக தடுப்பூசி செலுத்த முன்வரவேண்டும்!’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…