செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல் பயோடெக் ஆலையில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க உத்தர விட முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும்,மக்களைக் காக்கவும் ஒரே வழி தடுப்பூசிதான் என்கிற அடிப்படையில் தடுப்பூசி போடும் இயக்கத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் முன்னெடுத்து வருகின்றன.
மேலும்,இந்தியாவில் தடுப்பூசியை இரண்டு நிறுவனங்கள் மட்டுமே தயாரிப்பதால் மாநிலங்களுக்கு தடுப்பூசி உரிய அளவீட்டில் கிடைக்கவில்லை.
இதனால்,கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல் பயோடெக் தடுப்பூசி ஆலையைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி தயாரிக்கும் பணிகளுக்கு உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த வெர்ணிக்கா மேரி என்பவர்,சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இதனையடுத்து,இந்த வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கூறுகையில்,”தடுப்பூசி தயாரிப்பு குறித்து மத்திய மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில்,இடையூறு ஏற்படுத்தும் விதமாக நீதிமன்றம் அதில் தலையிட முடியாது.
மேலும்,தடுப்பூசி உற்பத்திக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அரசுகள் முடிவெடுக்கும்.எனவே,செங்கல்பட்டு ஆலையில் தடுப்பூசி தயாரிக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது”,என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…
சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…
கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…
சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…
சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…
சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…