Minister Senthil balaji [File Image]
இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அதன் பிறகு இதய அறுவை சிகிச்சை காரணமாக காவேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் காவேரி மருத்துவமனையில் புழல் சிறை கட்டுப்பாட்டில் தனி வார்டில் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார்.
இதற்கிடையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல், உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர் பொறுப்பில் இருந்த இரு துறைகளும் மற்ற அமைச்சர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. அப்போது, தமிழக முதல்வர் ஆளுநருக்கு விடுத்த பரிந்துரையில் இரு துறைகள் மற்ற அமைச்சர்களுக்கு மாற்றப்படுவதை ஏற்றுக்கொள்வதாகவும், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஆளுநர் ரவி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடரும் விவகாரம் குறித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.எல்.ரவி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கறிஞர்கள் வாதிடுகையில், அமைச்சர்களை நியமிப்பது ஆளுநரின் விருப்பம். செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் இருப்பதாலும் அவர் இதய அறுவை சிகிச்சை செய்து இருப்பதாலும் அவரால் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது. எனவே இலாகா இல்லாத அமைச்சராக அவர் தொடர அனுமதிக்க கூடாது என வாதிட்டனர்.
அதன்பிறகு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர விருப்பமில்லை என்று தான் ஆளுநர் கூறி இருக்கிறார். அவரை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஆளுநர் ரவி கூறவில்லை. மேலும், தற்போது செந்தில் பாலாஜி விசாரணையில் தான் இருக்கிறார். குற்றவழக்கில் இன்னும் தண்டனை வழங்கப்பட வில்லை.2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் மட்டுமே பதவி விலக நேரிடும் எனவும், ஆளுநருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என கூறி இந்த வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்ததனர்.
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…
சென்னை : தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த இடமாற்றம் உத்தரவை…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை சென்னை அடையாறு…