கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபல துணிக்கடை உரிமையாளர் வினோத்குமார் ஆவார்.இவருக்கும் திருப்பூரை சேர்ந்த நடன அழகி சுதா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இருவரும் உல்லாசமாக இருக்க முடிவு செய்துள்ளனர்.இதன் காரணமாக கடந்த டிசம்பர் 31-ம் தேதி வினோத்குமாரும் நடன அழகி சுதாவும் ஆனைமலை அருகே உள்ள பூவலப்பருதி பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதை அங்கு மறைந்திருந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளனர்.பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த 5 பேர் கொண்ட கும்பல் பண்ணை வீட்டிற்குள் நுழைந்து வினோத்குமாரை தாக்கியுள்ளனர்.
பின்னர் அவரிடம் இருந்த 5 சவரன் நகை ,ஏடிஎம் கார்ட் மற்றும் அவருடைய சொகுசு காரை அந்த கும்பல் பறித்துள்ளது.பின்னர் இருவரையும் காரில் கடத்தி சென்ற கும்பல் ,பொள்ளாச்சி அம்பராம்பாளையத்தில் வினோத்குமாரை இறக்கிவிட்டுள்ளது.
ஆனால் சுதாவை அந்த கும்பல் இறக்கிவிட வில்லை.அப்போதுதான் அந்த கூட்டத்தில் சுதாவும் ஒருவர் என வினோத்குமாருக்கு தெரியவந்துள்ளது.பின்னர் சிறிது நாட்கள் கழித்து வினோத்குமாரை அந்த கும்பல் 25 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளது.
பணம் தர மறுத்தால் சுதாவுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்டுவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த வினோத்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினரின் ஆலோசனைப்படி வினோத்குமார் பணம் தருவது போல சென்றுள்ளார்.அப்போது கேரளா தமிழ்நாடு எல்லை பகுதியான மீனாட்சி புரத்துக்கு கொள்ளை கும்பல் வந்த போது மறைந்திருந்த காவல்துறையினர் மர்ம கும்பலை வளைத்து பிடித்துள்ளனர்.
இதில் சுதா உட்பட செந்தில்குமார் அவரின் கூட்டாளிகளான சதீஷ் ,கமல் ,அஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…