தூத்துக்குடியில் உள்ள நீர்வரத்து ஓடையில் கிராம மக்களே நிதி திரட்டி தூர்வாரும் பணிகளை தொடங்கியுள்ளனர்.
தூத்துக்குடியில் கோவில்பட்டிக்கு அருகே உள்ள அய்யனேரி கிராமத்துக்கு உட்பட்ட செவல்குளம் கண்மாயில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் வராமல் உள்ளது.சுமார் 130 ஏக்கர் பரப்புடைய இந்த கண்மாய் ஓடை தூர் வாராமல் உள்ள காரணத்தால் நீர்வரத்து நின்றதாகவும், எனவே பெரிய ஓடைகளை தூர் வாரி , கரைகளை பலப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது தூத்துக்குடியில் அய்யனேரி, பிள்ளையார்நத்தம், வெங்கடாசலபுரம் பகுதியை சேர்ந்த மக்கள் அனைவரும் ரூ. 15 லட்சம் வரை நிதி திரட்டி பெரிய ஓடையை தூர் வாரி, கரைகளை பலப்படுத்தி, தடுப்பணைகளை கட்ட முடிவெடுத்துள்ளனர்.
அந்த வகையில் சுமார் நான்கரை கிலோ மீட்டர் அளவுக்கு ஒடையை செப்பனிடும் பணிகள் தொடங்கவுள்ளது. அதன் தொடக்க நிகழ்வாக பூமி பூஜை நடத்தியுள்ளனர். இந்த ஓடை செப்பனிடும் பணி மூலம் பெரிய ஓடையிலிருந்து செட்டிக்குளம் ஓடைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும். அங்கிருந்து வெங்கடாசலபுரம் பூவனகாவலன் கண்மாய், அங்கிருந்து மறுகால் வழியாக அய்யனேரி செவல்குளம் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும் என்றும், இதன் மூலம் பல விளை நிலைகளுக்கு பாசன வசதி பெற்று பல விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் கூறப்படுகிறது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…