தூத்துக்குடி மாவட்டம் அருகே 25 வயது போலீஸ் ஒருவர் தான் காதலிக்கும் பெண் வீட்டில் சம்மதம் தெரிவிக்காதததால் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் அடுத்த புதுக்கோட்டை அருகிலுள்ள கீழ செக்காரக்குடியைச் சேர்ந்தவர் சுப்பையா இவருடைய மகன் ராமச்சந்திரன் வயது 25 இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆயுதப்படை போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார் இந்த நிலையில் கடந்த 6ம் தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார் , மேலும் விடுமுறை முடிந்த பிறகு பணிக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே ராமச்சந்திரன் சோகமாக இருந்து வந்த நிலையில் நேற்று மாலை அவர் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துவிட்டார், மேலும் இதுகுறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர், அப்பொழுது போலீசாருக்கு கிடைத்த தகவல் , ராமச்சந்திரன் அந்த பகுதியில் உள்ள ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த காதல் அந்த பெண்ணின் வீட்டில் தெரிந்து ராமச்சந்திரனுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்துள்ளார்கள். இதில் மனமுடைந்த ராமச்சந்திரன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து இருப்பதாக தெரியவந்துள்ளது, மேலும் தொடர்ந்து போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…