குடியுரிமை தரும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் , அமைச்சர் பாண்டியராஜன் பேசுகையில், இலங்கை தமிழர்களுக்கான இரட்டை குடியுரிமை வழங்குவதில் எந்த தவறும் இல்லை என்றும் தெரிவித்தார். அதிமுகவின் நிலைப்பாடு சரிதான் என்று தெரிவித்தார்.ஜெயலலிதா பல ஆண்டுகால இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.
இதன் பின் பாண்டியராஜன் பேச்சில் எந்த மீறலும் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்தார். ஆனால் சபாநாயகரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து , தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு துரைமுருகன் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், குடியுரிமை தரும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது.மத்திய அமைச்சரால் முடியாது என்று சொன்ன விஷயத்தை அமைச்சர் பாண்டியராஜன் முடியும் என்று கூறுகிறார். மத்திய அரசு கொடுக்க முடியாததை இவர்கொடுக்க முடியும், இதை சபாநாயர் தனபாலிடம் கூறினால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…