முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம், இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் மழைப்பாதிப்பு குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார்.
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெல்ல நீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. குறிப்பாக சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குளாகி உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம், இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் மழைப்பாதிப்பு குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் கேட்டறிந்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். மழை வெள்ள பாதிப்புகள் குறித்தும், தமிழ்நாடு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் பற்றியும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களுக்கு எடுத்துரைத்து, தமிழகத்தின் மாநில பேரிடர் நிதியானது கொரோனா நிவாரணப் பணிகளுக்கும், இதுவரை ஏற்பட்டுள்ள பல்வேறு பாதிப்புகளுக்கும் செலவு செய்யப்பட்டுள்ளதால், தேசிய பேரிடர் நிதியிலிருந்து போதுமான நிதியினை ஒதுக்கீடு செய்துதர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து கேட்டறிந்த மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள். தமிழ்நாட்டில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்திட தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்வதாகவும், மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தேவையான ஒத்துழைப்பை நல்குவதாகவும் உறுதியளித்தார்.’ என தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…