ரயில்களில் கட்டுப்பாடுகளுடன் உணவு விற்க அனுமதி- இரயில்வே அறிவிப்பு

ரயில்களில் உணவு விற்க இரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பயணிகள் ரெயில் சேவை கடந்த மார்ச்.,22ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது.
தற்போதுஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மே., 12ந்தேதி முதல் தலைநகர் டெல்லியை நாட்டின் பிற பகுதிகளோடு இணைக்க 15 ஜோடி பிரிமியம் ராஜ்தானி சிறப்பு ரெயில்களை ஜூன் 1ந்தேதி முதல் 100 ஜோடி தொலைவிட ரெயில்களையும் ரெயில்வே நிர்வாகம் இயக்க தொடங்கியது.
இதற்கு அடுத்தகட்டமாக தீபாவளி பண்டிகை வருவதால் அக்.,15 தேதி முதல் நவ.,30 தேதி வரையில் பண்டிகை காலம் என்பதால் 200 சிறப்பு ரெயில்களை இயக்க திட்டமிட்டு உள்ளதாக ரெயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் அறிவித்தார். இவரின் அறிவிப்பு பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் பயணிகளின் வசதிகளுக்காக ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் அமைந்துள்ள உணவகங்கள், கடைகளில் சமைக்கப்பட்ட உணவுகளை விற்பனை செய்ய நிர்வாகம் அனுமதித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பை இந்திய ரெயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் ஐ.ஆர்.சி.டி.சி. வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ளவைகள் பின்வருமாறு:-செப்.,30ந்தேதி வரையில் 10% உரிம கட்டணத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் உணவு பிளாசாக்கள், துரித உணவு பிரிவுகள், ஜன ஆஹார்கள், உணவகங்கள், அக்., 31தேதி வரை 20% உரிம கட்டணத்துடன் இயங்குவதற்கு ரெயில்வே மண்டலங்கள் அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் சமைக்கப்பட்ட உணவுகளை பார்சல்களாக மட்டுமே விற்க வேண்டும்.ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் அமைந்துள்ள உணவகங்களில், கடைகளில், ஸ்டால்களில் பயணிகள் யாரும் அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது.மேலும் இப்படிப்பட்ட ஓட்டல்கள், கடைகளை நடத்துவதற்கு மார்ச்23 தேதி வரை வழங்கப்பட்டிருந்த ஒப்பந்தங்கள் முடிந்துவிட்டது.ஆகவே 20% உரிம கட்டணத்தை செலுத்தி அக்.,31ந்தேதி வரை செயல்பட அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!
May 22, 2025
LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!
May 22, 2025