செங்கல்பட்டில் குழந்தைகள் வார்டில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை.
செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் தாய், சேய் குழந்தைகள் சிறப்பு வார்டில், 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதுகாக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வார்டில் திடீரென்று மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இது ஒரு தாயும் குழந்தையும் படுத்திருந்த படுக்கையின் மீது விழுந்துள்ளது. ஆனால் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை.
உடனடியாக குழந்தையை அங்கிருந்து எடுத்துக்கொண்டு, அடுத்த வார்டுக்கு பாதுகாப்பாக சென்று விட்டனர். மேற்கூரை முழுவதும் சேதம் அடைந்த நிலையில் அதை பூசி சரிசெய்யாமல், தெர்மாகோலை வைத்து மறைத்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து , எந்த பெற்றோரும் அந்த வார்டில் இருக்க முன்வரவில்லை. மேலும், இது தொடர்பாக மருத்துவமனை முதல்வர் கூறுகையில், பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கொண்டு விரைவில் மேற்கூரை சரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…