திருமணத்திற்கு நகை திருடிய வினோத திருடன்.? கோவை நகைக்கடையில் நடந்தது என்ன.?

Robbery

கோவை காந்திபுரத்தில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நடந்துள்ள கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நபர் மட்டுமே கடைக்குள் புகுந்து, நூதனமான முறையில் கொள்ளையடித்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில், மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். 100 சவரன் வரை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

சனாதன சர்ச்சை பேச்சு.! தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.!

ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் சுவற்றில் துளையிட்டு 25 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், குற்றவாளியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், குற்றவாளிகளை கைது செய்வோம் என மாநகர காவல் ஆணையர் உறுதி அளித்துள்ளார். 

இந்த நிலையில், கொள்ளையடித்த திருடன், தனது திருமணத்திற்கு தேவையான நகையை மட்டும் தேர்ந்தெடுத்து திருடியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனிப்படை போலீசார் திருடனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில் 2-ஆவது நாளாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்