எச்சரிக்கை: இந்த 11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்.!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகத்தில் ஏற்கனவே வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஆம்பன் புயல் கரையை கடக்கும் பொது தமிழகத்தில் உள்ள ஈரக்காற்றை முழுவதும் இழுத்து சென்றது. இதனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை  தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று அதிகபட்ச வெப்பநிலையாக, திருத்தணியில் 110.8 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு. மேலும், தமிழகத்தில் இன்று 13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.

இந்நிலையில், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயில் 104 டிகிரியை தாண்டும் என்பதால் பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், மதுரை, திருச்சி, கரூரில் 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும். தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நெல்லையிலும் வெயில் 104 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டும் என்று கூறியுள்ளது.

இந்த 2 நாட்களுக்கு பிறகு வெயில் படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது என்றும் பலத்த காற்று வீசும் என்பதால் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு 5 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பச்சலனத்தால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக நீலகிரியில் 7, சித்தார், எடப்பாடியில் தலா 5 செ.மீ மழை பதிவானது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…

5 hours ago

பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…

6 hours ago

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

7 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

9 hours ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

9 hours ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

10 hours ago