சென்னையில் உள்ள தரமணி என்ற பகுதியை சேர்ந்தவர், ராஜா மொயிதீன். இவர் கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள பாலவாக்கத்தில் கறி கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இவர் கடந்த மூன்றாம் தேதி அவரது குடும்பத்தினருடன் கோவளத்திற்கு சென்றார். மாலை வீடு திரும்பிய அவர், தனது வீட்டு கதவு திறந்தே இருப்பதை கண்டு அதிர்ந்தார். மேலும், உள்ளே சென்று பார்த்த பொது, அவர் பீரோவில் இருந்த 14 லட்ச ரூபாய் பணமும், 9 சவரன் நகையும் காணவில்லை.
இதனையடுத்து தரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அங்கு உள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆய்வுகளை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகளின் மூலம், மொய்தினிடம் மூன்று மாதங்களுக்கு முன்பு வேலை பார்த்த சையது என்பவர் அவர் வீட்டில் உள்ள நகைகளை திருடியதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பதுங்கி இருந்த அவரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பதுங்கி இருந்த சையது, மற்றும் அவரின் தம்பி அப்துல்லா மற்றும் அவரது நண்பர் முகமது ஆசிப் ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து பணத்தையும் நகையையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…