சாத்தான் குளத்தில் பக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க சென்ற 7 வயது சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளத்தில் தந்தை – மகன் போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு பரிதாபமான சம்பவம் நடந்துள்ளது, அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் உள்ள, கல்விளை இந்திரா நகரைச் சேர்ந்த உச்சிமாகாளி என்பவர், கணவரை பிரிந்து தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இவர் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு, வழக்கம் போல் அவர் தோட்ட வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது அந்த குழந்தைகள், அருகிலுள்ள முத்தீஸ்வரன் என்பவரது வீட்டில் டி.வி பார்க்கச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, உச்சிமாகாளியின் மகன் மட்டும் வீடு திரும்பிய நிலையில், மகள் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், கிராமத்தின் அருகே உள்ள பாலத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த சிறிய டிரம்மில், சிறுமியின் உடல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த டிரம்மை, முத்தீஸ்வரனும், அவரது நண்பன் நந்தீஸ்வரனும் தங்கள் டி.வி.எஸ் எக்செல் வாகனத்தில் வைத்து எடுத்துச் சென்றதை கிராம மக்கள் பார்த்துள்ளனர்.
இதனையடுத்து, இந்த இருவரையும் பிடித்து, பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் இருவரையும் விசாரித்ததில், சிறுமி கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட இருவர் மீதும் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முத்தீஸ்வரனின் தாய் மற்றும் தந்தை தலைமறைவாகி உள்ள நிலையில், எதற்காக அந்த சிறுமி கொலை செய்யப்பட்டார் என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…