#BREAKING: பாலியல் வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு ஜாமீன் ..!

Published by
murugan

முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு முன்ஜாமீன் வழங்கி விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கடந்த ஏப்ரல் மாதம் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுபயணத்தின் போது அவரின் பாதுகாப்புப் பணியில் இருந்தார். சிறப்பு டிஜிபி தனது மாவட்டத்திற்கு வந்ததால் மரியாதை நிமித்தமாக பெண் எஸ்பி சந்தித்துள்ளார். அப்போது சிறப்பு டிஜிபி, பெண் எஸ்பியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து முன்னாள் டிஜிபி மற்றும் உள்துறைச் செயலரிடம் பெண் ஐபிஎஸ் புகார் அளித்தார்.

பின்னர், சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு உதவிய எஸ்.பியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 20-ம் தேதிக்குள் முடிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட சிறப்பு டிஜிபி மற்றும் உதவி செய்த எஸ்.பி 2 பேருக்கும் சம்மன் அனுப்பி இன்று நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில், =முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் மற்றொரு ஐபிஎஸ் அதிகாரிக்கு முன்ஜாமீன் வழங்கி விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Published by
murugan
Tags: #DGP

Recent Posts

”கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை” – வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

”கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை” – வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

கேரளா : கேரளாவில் 8 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD)…

10 minutes ago

மிரட்டும் கனமழை.!! 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!

சென்னை : அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது .கோவை,…

55 minutes ago

PBKS vs DC: ஆறுதல் வெற்றியுடன் தொடரை முடிக்குமா டெல்லி.? இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியுடன் மோதல்.!

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றது. இந்த…

1 hour ago

நிதி ஆயோக் கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு.., மம்தா, சித்தராமையா பங்கேற்கவில்லை.!

டெல்லி : மத்திய அமைச்சரவை மூலம் கடந்த 2015, ஜனவரி 1-ல் உருவானது தான் நிதி ஆயோக். தேச வளர்ச்சி,…

2 hours ago

”கீழடி ஆய்வறிக்கையில் திருத்தம் தேவையில்லை” – தொல்லியல் ஆய்வாளர்.!

சென்னை : கீழடி, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இங்கு 2014-15 முதல் மத்திய தொல்லியல்…

2 hours ago

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., எங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்?

சென்னை : அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…

3 hours ago